Saturday, November 30, 2013

வீரம் பன்ச் - 1




வீரம் படத்தில் பன்ச் டயலாக்  இருக்காதென அறிவித்து விட்டனர் . ஏன் நாமே எழுத கூடாது ?

************


வில்லன் ருத்ரனை ( நம்ம தல தான் ) தீர்த்து கட்ட ஒரு கூலி கும்பலை அனுப்பி வைக்கிறார் .சில மணி நேரம் கழித்து ..

வில்லன் செல்போன் மணி அடிக்கிறது . 'எங்க ஏரியா உள்ள வராத ..' ரீங்டோன்.

வில்லன் : ' யாருடா ?'

ருத்ரன் : 'இன்னும் இரண்டு நாள் டைம் தரேன் .அதுக்குள்ள இன்சூரன்ஸ் எடுத்துக்கோ, சொத்து இருந்து எழுதி வெச்சுடு, கடன் இருந்த திருப்பி கொடுத்திட்டு,

வில்லன் : டேய் டேய் , இன்னும் ஒரு மணி நேரம் பொருடா .. உன் தலய இங்க வீட்டு வாசல்ல திருஷ்டியா வக்கிறேன் .. ( இன்னொரு போனில் இந்த கூலி படையை கால் செய்கிறார் . 'தாங்கள் டயல் செய்த வாடிக்கையாளர் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறார்' யென்று வருகிறது .

ருத்ரன் : 'என்டா அவசரபடர ....இன்னும் இரண்டு நாள் வெயிட் பண்ணு , உன்ன அவங்க இருக்கிற இடத்துக்கு அனுப்பி வைக்கிறேன். நேர்ல பார்த்தே பேசு ."

Sunday, November 10, 2013

வேலைக்கு ஆகாது !



கிரிஷுக்கு தூக்கம் வர வில்லை.எப்போதும் போல . படபடப்புடன் கோபமும் கலவி கொண்டது.

" நீங்க என்ன பண்றீங்க ?"

" இப்ப ஹவுஸ் வைப் "

இந்த உரையாடல் ஒரு பத்து தடவை நடந்திருக்கும்  - ஒரே கேள்வி, பலர் கேட்டனர். ஒரே பதில், அவரின் மனைவியிடம், இரவு பார்டியில் .
பல பேர் கேட்டாலும் , பத்மினி கேட்ட போ'து சகிக்க வில்லை.அவள் அழாகாய் இருந்தாள். பத்து வருடம் முன்பும், கிரிஷுடன் காலேஜ் படிக்கும் போது.
***

வீட்டு பூட்டை திறந்து கொண்டே.. " உமா , அடுத்த மாசத்திலிருந்து நீ வேலைக்கு போற. நான் ஷ்ரவன்க் கிட்ட பேசறேன்.  " .

"ஷ்ரவன் .. டேய் , உமாவுக்கு வேலை வேணும் டா "

" இந்த ராத்திரியிலா?" . லேசாக , அரை நிர்வாண பெண் புலம்பல் கேட்டது .

***


காலையில் குடிக்கும் காபி அவன் முளையை தட்டியது .

" உமா .. நீ உன் சி.வி தயார் பண்ணு . வீட்டு வேலைகளை நாம ஷேர் பண்ணிக்கலாம் "

********

"ஷ்ரவன் .. சி.வி அனுபிச்சேன் வந்ததா "

"டேய் .. உனக்கு ஜாக்பாட் .. அவ ஹடூப் ல போன  வருஷம் கோர்ஸ் பண்ணா இல்ல .. இப்ப அதுக்கு செம டிமாண்ட். வருஷத்துக்கு பத்து வரும்டா கைல. அடுத்த வருஷம் உன்ன தாண்டிடுவா  "

 "ரொம்ப தாங்க்ஸ்டா .. அவ கிட்ட கேட்டு சொல்றேன் டா "

***
"என்னடா சொல்ற .. உனக்கு தான்டா கஷ்ட பட்டு உமாக்கு ஒருசினியர் பொசிஷன் வெச்சேன் "

" உன் கிட்ட சொல்றது என்னடா .. அவளுக்கு ரொம்ப நாளா  மூட் Swings இருக்கும் டா .. அப்ப அப்ப இது வேணும் அது வேணும் பா .. நானும் அவள ஏமாத்த கூடாதுன்னு ஏதாவது செஞ்சா  மாறுவான்னு ட்ரை பண்ணுவேன் "

***

இரவு பதினோரு மணி .

" ஷ்ரவன் என்ன சொன்னான் பா ?"

" அவன பத்தி பேசாத ..   அவனுக்கு  கிழ வேலை செய்யணுமா.. அவனுக்கு அடிமையா நீ இருக்கணும்ன்னு அவசியம் இல்ல "

அவனை பெருமையாய் பார்த்தாள்.   அந்த இரவை  அவனுக்கு பெருமை படுத்தினாள்.








Friday, July 12, 2013

டாக்டருக்கு B.P ஏறி போச்சு ! - Part 3



1990 .

எப்படியோஒரு வழியாக பார்த்தாவை டாக்டருக்கு போவதற்கு கன்வின்ஸ் செய்து , இருவரும்  தயாரானார்கள். தயாரான கூத்தை இந்த பக்கங்களில் படிக்கவும்  - முதல் , இரண்டு படிக்கவும்.

ஒரு வழியாக , டிபன் முடித்து விட்டு , இருவரும் ஹாஸ்பிடல் போக தயாரானார்கள். வீட்டின் அருகே ஆட்டோ வராததால் , பக்கது  மெயின் ரோட்டுக்கு சென்றனர். அங்கே ஒரு ஆட்டோ இருந்தது . 

 பார்த்தா : 'ஆஸ்பத்திரிக்கு  வரியா?'

யாரோ :  'எந்த ஆஸ்பத்திரிக்கு சார் ?'

பார்த்தா : 'அடையார், மாறன் பா ..'

யாரோ : 'அது கொஞ்சம் சுமாரா தானே இருக்கும். வேற எங்கயாவது பீச், சினிமான்னு போங்களேன். எனக்கும் கொஞ்சம் ஜாலியா இருக்கும்.'


பார்த்தா : 'அடேய் , உடம்பு சரியில்லன்னா ஹாச்பிடல் தான்டா போகணும். அதுக்கு சாய்ஸ் கிடையாது. சரி, எவ்வளவு கேட்கற ?'

யாரோ : 'என்ன சார் , ஆஸ்பத்திருக்கு போறீங்க .  இதுக்கு போய் காசு கேட்பாங்களா ?'

பார்த்தா : 'பிரசவத்துக்கு தான் இலவசம்ன்னு கேள்வி பட்டிருக்கேன். நீ என்னடான்னா ..( சுஜாவிடம் முணுமுணுத்தபடி ' சரியான ஏமாளி டி ') ..'

'வா பா போகலாம் . .'

இப்படி சொன்னவுடன்  சுஜாவும், பார்த்தாவும் பின்னாடி உட்காருகிறார்கள் . அவர்களுடன் சேர்ந்து அந்த ஆசாமியும் உட்காருகிறான்.

பார்த்தா : 'யோவ், என்னையா  எங்க கூட உட்கார்ற? ஆட்டோவ யார் ஒட்டுவா'

யாரோ : 'டிரைவர் தான் .'

பார்த்தா : ' அப்ப நீ டிரைவர் இல்லையா ?'

யாரோ : 'நானும் டிரைவர் தான் . '

பார்த்தா : 'அப்ப, ஓட்ட வேண்டியதானே ?'

யாரோ : 'என்னோட வண்டிய தானே நான் ஓட்ட முடியும் ?'

பார்த்தா : 'அப்ப, உன் ஆட்டோ இது இல்லையா ?'

யாரோ :  'அட போயா , என் கிட்ட ஆட்டோவே  இல்லையே !'

பார்த்தா : 'டிரைவர்ன்னு சொன்ன ?'

யாரோ : ' ஆமாம் . அங்க இருக்கு பாரு அந்த மூணு சக்கர வண்டி. அதோட டிரைவர் .'

பார்த்தா : 'அப்ப, ஆஸ்பத்திருக்கு வர்றியா கேட்டதுக்கு வரேன் சொன்ன ?'

யாரோ : 'ஆமாம் . எனக்கு வயறு சரியில்ல .. என்ன கூட்டிட்டு போறேன்னு நினைச்சேன்.'

பார்த்தா :  'அதுக்கு  ஏன்டா டிரைவர் சீட்ல தனியா  உட்கார்ந்து  இருந்த ?


யாரோ : 'யோவ் ..  அங்க நிக்கிற  பஸ்ஸ பாரு .. ஒரு பாட்டி மட்டும் தனியா உட்கார்ந்து இருக்கு .. அப்ப அந்த பாட்டி தான் டிரைவரா ?'

அந்த ஆசாமி கிளம்பியுடன் ,பார்த்தாவும் சுஜாவும் மறுபடியும் இன்னொரு ஆட்டோவை தேட ஆரம்பித்தனர்.

சுஜா :  'பேசாம பஸ்ல போய் இருக்கலாம் . கூட்டமா இருந்தாலும், டிரைவர் யார்ன்னு குழப்பம் இருக்காது

பார்த்தா : 'நீ பேசாம இருப்பேன்னா நடந்து கூட போக தயார்டி.. சரி சரி.. அங்க ஒரு ஆட்டோவும் டிரைவரும் இருக்காங்க .. ரெண்டும் சேர்ந்து வருவாங்களான்னு கேட்கலாம்.'

சுஜா : ' இது ஆட்டோவா ?'

அந்த ஆட்டோகாரன்  நிமிர்ந்து பார்க்கிறான் . இது ஒரு கேள்வியா என்பது போல ஒரு பார்க்காத பார்வை.

பார்த்தா : ' இது உன் ஆட்டோவா ?'

சுஜா : ' இருங்க , அதுக்கு  முன்னாடி ... நீ ஆட்டோ டிரைவர்   தானா ?'

ஆ.டிரைவர் : ' என்ன சார் . ரெண்டு பெரும் தனியாவா வந்து இருக்கீங்க ?'

பார்த்தா : ' ரெண்டு பேர் .. அப்புறம் என்ன தனியா ?'

ஆ.டிரைவர் : ' புரியுது சார் .. நீங்க ஹாஸ்பிடல் தானே போகணும் '

பார்த்தா : ' ஆமாம்பா ..'

ஆ.டிரைவர்  : ' கிழ்பாக்கம் தானே .. ரெண்டு பேர பார்த்தாலே தெரியுது '


பார்த்தா : ' அதுக்கு  இவளோட சொந்தக்காரங்க வருவாங்க .. இப்போதிக்கி அடையார் மாறன் ஹாஸ்பிடல் போகணும் ..எவ்வளவு ஆகும் ?'

ஆ.டிரைவர்  : 'அம்பது ரூபா சார்  '

பார்த்தா : ' மாறன் ஹாஸ்பிடல்க்கு அம்பது ரூபாயா ?"


ஆ.டிரைவர்  : ' மாறன் ஹாசஸ்பிடல்க்கு இல்ல சார் .. அங்க போறதுக்கு '

பார்த்தா : 'கொஞ்சம் கொறச்சுக்கபா ..நாப்பது ரூபா வாங்கிக்கோ..'

ஆ.டிரைவர்  : 'நாப்பது ரூபாக்கு போகணும்னா , பக்கத்துக்கு ஸ்டாப்ல இருந்து போகலாம் . நீங்க நடந்து போய் பக்கது ஸ்டாப்ல நில்லுங்க , நான் வரேன் ..'

சுஜா : '( பார்த்தாவிடம்) .. இங்க பாருங்க , டைம் ஆச்சு , பத்து ரூபா தானே ...
சரி பா , வா போகலாம் .'

பார்த்தா  : இருடி ..அவசரபடாத... ' என்னபா , மீட்டர் போடுவியா ?'

ஆ.டிரைவர்  :  ' சாரி சார் . அந்த பழக்கம் எனக்கு இல்ல '

பார்த்தா : 'என்னைய இது என்னமோ தண்ணி அடிக்கிற பழக்கம் மாதிரி சொல்ற ... லா படி நீ மீட்டர் போடணும் .. மீட்டர போடு '

இப்படியா அவர்கள் ஆட்டோவில் பயணம் செய்ய தொடங்கினர் .பேசி கொண்டு  ஒரு பதினைந்து நிமிடம் கழித்து  மீட்டரை பார்க்கும் பொழுது பார்த்தாவுக்கு அதிர்ச்சி .. குதிரை வேகத்தில் செல்கிறது !

பார்த்தா : 'என்னடா இது மீட்டரா இல்ல ஹீட்டரா ?  மொதல்ல உன்னோட மீட்டர  தான்டா ஹாஸ்பிடல்ல  சேர்க்கணும்.நல்ல வேளைடா இந்த மீட்டர கிளாக்கா யூஸ் பண்ணல, பண்ணி இருந்தா இத்த நேரம் எனக்கு ரீடைர்மென்ட் வந்து இருக்கும் .'

ஆ.டிரைவர்  :' காச பார்க்காத சார் . ராசிய பாரு .இந்த ஆட்டோல பத்தில , அஞ்சு பேருக்கு குணம் ஆகிடும் ..'

பார்த்தா : 'அப்பா , அந்த மீதி அஞ்சுபேர் ?'

ஆ.டிரைவர்  : ' அவங்க அந்த மீதி அஞ்சு பேர பார்க்க  வந்தவங்க !'

 பார்த்தா : ' சுத்த ராசி இல்லாத ஆட்டோவா இருக்கும் போல . உன் பேர் என்ன பா '

ஆ.டிரைவர்  : ' கரிகாலன் சார் '

பார்த்தா :  ' பேசாம ராகுகாலன்னு வெச்சு இருக்கலாம் . '

 ஆட்டோ மாறன் ஹாஸ்பிடல் தாண்டி பீசன்ட் நகர் சென்றது ..

பார்த்தா : 'யோவ் .. என்னைய மாறன் ஹாஸ்பிடல் தாண்டி எங்கயா வந்து இருக்க ..'

ஆ.டிரைவர்  : ' உங்க கூட பேசினதில நேரம் போனதே தெரியல ..  பாருங்க  பழக்க தோஷத்தில சுடுகாட்டுக்கு வந்திட்டேன் '


பார்த்தா : 'பழக்க  தோஷத்திலா ?

ஆ.டிரைவர்  :' நம்ம வீடு பக்கத்தில இருக்கு சார் .என்கிக்காவது போக தான் போறோம். போக போது தூக்கிட்டு போற  செலவு வைக்க வேண்டாம் பாருங்க, அதான் பக்கத்தில வீடு கட்டிட்டேன்  .. இந்த வெட்டியான் கூட நம்ம தோஸ்த் தான் . ஏதாவது வேணும்னா சொல்லுங்க , சீப்பா பண்ணிதறேன் '

பார்த்தா : ' உன் கிட்டா பேசினா உசிரே போய்டும் போல .. திரும்பி ஹாஸ்பிடல் போ '

ஆ.டிரைவர்  : 'நம்ம தான் ஹாச்பிடலே போகலயே .. அப்புறம் எப்படி திரும்பி போக சொல்ற '

பார்த்தா : '  நீ வண்டி ஓட்டற லட்சதனதுக்கு  வார்த்தைல விளையாடற ... ஆட்டோவ திருப்புயா'

இப்படியா ஒரு வழியா ஹாஸ்பிடல் வந்து சேர்ந்தனர்.

Thursday, July 4, 2013

டாக்டருக்கு B.P ஏறி போச்சு ! - Part 2




1990 .

எப்படியோஒரு வழியாக பார்த்தாவை டாக்டருக்கு போவதற்கு கன்வின்ஸ் செய்து , இருவரும்  தயாரானார்கள். தயாரான கூத்தை இங்கே படிக்கவும் .

இரவு நேரம் ஆகி விட்டதால் நாளைக்கு செலலாமென்று முடிவெடுத்தனர்.

மறு நாள் காலை. பார்த்தா உறங்கி கொண்டு இருந்தான் .

சுஜா : சீக்கிரம் எந்திரிங்க .. வர வர நீங்க  நிறைய தூங்குறீங்க .. வேற எதாவது பிரச்சனையான்னு பார்க்கணும் .. ஒரு நாலு இட்லி சாப்பிட்டு டக்குன்னு ஹாச்பிடல்க்கு கிளம்புங்க ...

பார்த்தா : என்னடி இது கொஞ்சம் கோர்வையா சொல்ற .... உன் இட்லி சாப்பிடனும் , அப்புறம் ஹாஸ்பிடல் போகணும்ன்னு ..ஆமாம் அலாரம் என் அடிக்கல ? சரியா எழு மணிக்கு தானே வெச்சேன் !

சுஜா : ( electronic கிளாக்கை பார்த்து ) நாசமா போச்சு !

பார்த்தா : அதுவுமா ? கிளாக் உன் சமயல சாப்பிடாதே ?

சுஜா : வாய மூடுங்க ...நீங்க அலாரம் வெச்சது சாயங்காலம் ஏழு  மணிக்கு

பார்த்தா : அப்ப, அது வரைக்கும் எப்படி தூங்கறது ? நீ கொஞ்சம் பேசிகிட்டு இருக்கியா ?  அப்படியே தூக்கம் வந்துடும் .

சுஜா :ச் .. சீக்கிரம் பொய் பல் தேச்சு குளிச்சு ரெடி ஆகுங்க .. இன்னும் அரை மணி நேரத்தில கரண்ட் போயிடும்

பார்த்தா :  ஏன்டி , நான் என்ன பல் கரண்ட் வொயர வெச்சா தேய்க்க போறேன் .. அதுக்கு எதுக்கு கரண்ட் ? உனக்கு சமையல் தான் தெரியாதுன்னு நெனச்சேன் .. இப்ப பொது அறிவும் ஆவ்ட்டா ?

சுஜா : அதுக்கு முன்னாடி  தண்ணி நின்னு போகும் ..

 பார்த்தா : அதான் ஒரு நாலு வாளி தண்ணி புடிச்சு வைக்க  போறேன்னு சொன்னியே .... 

சுஜா : அது எங்க அப்பாவுக்கு .. மத்தியானம் வருவாரு .. நாம இல்லாத போது அவர் கஷ்ட படக்கூடாதுன்னு புடிச்சி வெச்சு இருக்கேன் ..

பார்த்தா : நாம இல்லாத  போது கஷ்டப்டரத பத்தி சொல்ற .. அவர்  இருக்கிற போது நான் கஷ்டபடரத நான் யார் கிட்ட சொல்றது ? ... ( உள்ளே அந்த வாளிகளை பார்த்து விட்டு ) ஆமாம் . உங்க அப்பா என்ன  அந்த தண்ணி வெச்சி நீச்சல் அடிக்க போறாரா ? எதுக்குடி இவ்வளவு தண்ணி ...

சுஜா :மசமசன்னு பேசாம சீக்கிரம் ஆக வேண்டியத பாருங்க ....

இப்படியாக பார்த்தா எழுந்து ,  குளித்து , ரெடியாக  டின்னர் டேபிள் உட்கார்ந்தான் . சுஜா பார்த்தாவுக்கு ஒரு தட்டில் டிபன் எடுத்து வைத்தார்.

பார்த்தா : என்னடி இட்லின்னு சொன்ன , இது கொஞ்சம் தட்டையா இருக்கு ?

சுஜா : இது கல் தோசைங்க ..

பார்த்தா : நீ சொன்னதில பாதி கரக்ட் . கல்மட்டும்தான் .தோசைஅது இதுன்னு பொய் சொல்லாத .

சுஜா : உலகத்தில ஒவ்வருதரையும் போய் பாருங்க ..நிறைய பேர் சாப்பாடு இல்லாம கஷ்ட படறாங்க

பார்த்தா : நானும் அவங்கள மாதிரி தான் .. சாப்பாடு இருந்தும் கஷ்ட படறேன் . அவங்களுகாவது அன்ன தானம்ன்னு அது இது நல்ல சாப்பாடு கிடைக்கும் . எனக்கு  தலைவிதி - இல்ல , நாக்கு விதி , அதே சாப்பாடு , மோசமான சாப்பாடு !

சுஜா : இப்ப சாப்பிடறீங்களா இல்லையா ? வேண்ணா உப்புமா பண்ணட்டுமா ?

பார்த்தா :  நல்ல பேரு வெச்சாங்க உப்புமா , வெறும் உப்பு மட்டும் தாண்டி இருக்கு அதில .. ஏதோ கடல் தண்ணி கட்டி ஆகின மாதிரி ஒருபீலிங்.


சுஜா : சீக்கிரம் சாப்பிடுங்க ... அதுக்கு அப்புறம் தான் சுகர்க்கு நிறைய டெஸ்ட் எடுப்பாங்க ..

பார்த்தா : இத சாப்பிடமா போனா சுகர் மட்டும் தாண்டி வரும் . சாப்பிட்டா பீ.பி , அல்சர், கான்செர், இன்னும் புதுசு புதுசா வரும் - ஒரு நூறு ரூபா செலவு செய்ய வேண்டிய  இடத்தில , ஒரு ஒரு லட்சம் செலவு செய்வோம் .

அப்போ டெலிபோன் மணி அடித்தது . சுஜா எடுத்தாள்.

சுஜா :  யாருங்க அந்த பக்கம் ?

மறுமுனையில் :  ஐயய்யோ , நீங்க போலீசா ?

சுஜா : இல்லப்பா .. நீ யாருப்பா ? வெளில இருந்து பேசுறியா ?

மறுமுனையில்  :   ஆமாம் மா . நேத்திக்கி தான் ரிலீஸ் பண்ணாங்க ... உடம்பு ஐஞ்சு கிலோ இறங்கி போச்சு .

சுஜா ( பார்த்தாவிடம் )  : என்னங்க , அந்த கடன்காரன் நட்டு தான் . உலகத்தில திருடன் கிட்ட , அதுவும் என் கிட்ட திருடினவன் கிட்ட பிரிண்ட்ஷிப் வெச்சுகிற முதல் ஆள் நீங்க தான் .

பார்த்தா : என்ன இருந்தாலும் , விரோதியோட விரோதி நண்பன்டி !

சுஜா :  என்னது ?

பார்த்தா : இல்ல இல்ல ,  நான் விரோதின்னு சொன்னது நம்ம ஏரியா இன்ஸ்பெக்டர்  மீசை முருகேசன !


பார்த்தா ( நட்டுவிடம்) : என்னபா கபாலி , எப்படி இருக்க ?

நட்டு : என் பேரு நடராஜன் கோபால் பா ..

பார்த்தா : என்ன பேருடா இது .. திருடன்னா ஒரு கபாலி , கோயிந்து அது மாதிரி இருக்க வேண்டாம் ? என்னமோ ஹிந்து பத்திரிக்கைக்கு லெட்டர் எழுதிற ஆள் மாதிரி இருக்கு உன் பேரு ..சரி சரி எப்ப உள்ள வந்த ?

நட்டு : வெளிய வந்தன்னு கேளுப்பா !

பார்த்தா : நீ மாசத்தில முப்பது நாள் ஜெயில்ல தான் இருக்க .. ஏதோ ஒண்ணுவிட்டு ஒரு மாசம் முப்பத்தியொரு நாள் வரும் பொழுது உனக்கு ஒரு நாள் லீவ் வரும் ... வெளிய வந்தா தாண்டா  நீ உள்ள போவ .. அது விடு , நீ எப்படி இருக்க ?

நட்டு : என்ன பா சொல்றது , ஒரு அஞ்சு கிலோ குறைஞ்சு போச்சு பா !

பார்த்தா : எப்படி டா , இப்பவெல்லாம் , ஜெயில்ல  அன்லிமிடெட் மீல்ஸ் போடறாங்கன்னு சொன்னங்க

நட்டு : அதுவெல்லாம் ஓகே பா , தூக்கம் கம்மி ஆகிடுச்ச ..

பார்த்தா : தூக்கம் வரலையா ? உனக்கு லவ் வர சான்ஸ் இல்ல - உலகத்தில இருக்கிற எல்லா பொண்ணுங்ககிட்டயும்  திருடி இருக்க - பொம்பள போலிஸ் உட்பட ... நம்ம முதல் அமைச்சர்  அம்மா கிட்ட மட்டும் இன்னும் திருடல ...அதுவும் அவங்க அப்பாயின்ட்மென்ட் கிடைச்சா அதுவும் செய்வ ! ஒரு  வேளை ஜெயில்ல  திருட ஆரம்பிச்சிடியா ? கன்டிநிவிட்டி இருக்கட்டும் பண்ணியா ?

நட்டு :   ஆமாம் பா .. தெரியாதனமா என் ரூம்  பேன்  திருடி தொலைச்சிட்டேன் .

பார்த்தா : ஏன்டா , ஒரு கவனம் வேண்டாமா ? சரி , இனிக்கி எது உன்னோட ஏரியா ?


நட்டு  : வேளச்சேரி மட்டும் சார் . முன்னாடி மாதிரி நிறைய இடம் போக முடியல ..


பார்த்தா : அட பாவமே , உடம்ப  நல்லா பாத்துக்கோ ... நல்ல ஜாகிங் பண்ணு ...தேம்பா புஷ்டியா இருந்தா தானே தப்பிக்க முடியும் ?வாழ்க்கையில் கொஞ்சம் முன்னேறுபா  ...எவ்வளவுநாள் தான்செயின் திருடியே பொழப்பு நடத்துவ .... ஒரு சி.டி பிளையர் எது இதுன்னு மேல போக வேண்டாமா ?

இப்படி அவனுக்கு உபதேசம் செய்து விட்டு , போன்ஐ வைத்தான் பார்த்தா ..

பார்த்தா :  பாத்தியாடி என்னோட சாமர்த்தியத்த  , அவனோட பிளான் இனிக்கி தெரிஞ்சு போச்சு . நம்ம கண்டிப்பா அந்த பக்கம் போகாம இருந்த உன் தங்கதாலி பத்திரமா இருக்கும் . என்னோட ஆயுசும் ரொம்ப  நாள் இருக்கும் .

ஒரு வழியாக , டிபன் முடித்து விட்டு , இருவரும் ஹாஸ்பிடல் போக தயாரானார்கள்.


Tuesday, June 25, 2013

டாக்டருக்கு B.P ஏறி போச்சு ! - Part 1



1990  - சுஜாவும் பார்த்தாவும் தம்பதியினர் . கல்யாணம் ஆகி இரண்டு ஆண்டுகள்  உருட்டி, கிருட்டி சமாளித்தனர்.  ஒரு சனிக்கிழமை, சாய்கால வேளை, பார்த்தா நாற்காலியில் உட்கார்ந்து இருந்தார் .சுஜா கிட்சன்லிருந்து ஹாலுக்கு வந்தார் .

சுஜா : 'வர வர நீங்க  ரொம்ப டயர்டா  ஆகறீங்க .. உங்க சுகர் செக் பண்ணனும். லோ லெவல் வந்தா இந்த மாதிரி இப்படி ஆகுமாம். '

பார்த்தா : 'தினமும்  ஒரு மூட்ட துணி கொடுத்து தொயிக்க சொன்னா , சுகர் வராம பின்ன சால்டா வரும் ?'

'இது  கூட பரவாயில்லடி ....நான் துவைக்கிற மேட்டர ஆபிஸ்ல ஏன் சொல்லி வெச்ச? ..இப்ப வெல்லாம் எவனாவது ஷர்ட்டில கறை வந்திசின்னா , சர்ப்பும் பார்த்தாவும் இருந்தா போதும்ன்னு கிண்டல் பண்றாங்க '

சுஜா : 'சும்மா வள வளன்னு பேசாதீங்க .. எனக்கு தெரிஞ்சு  ஒரு மருத்துவர் இருக்காரு '

பார்த்தா : 'என்னடி திடீர்ன்னு டாக்டர்ன்னு தமிழ்ல சொல்லாம மருத்துவர்ன்னு சொல்ற ? இப்பவெல்லாம் மருத்துவர்ன்னு சொன்னாலே அலறி அடிச்சு ஓடறாங்க நம்ம தமிழ் நாட்ல '

சுஜா : 'கொஞ்சம் சீரியஸா இருங்க .. சீக்கிரமா கிளம்புங்க .. அந்த டாக்டர் எட்டு மணிக்கு கிளம்பிடுவாரு'

பார்த்தா : 'சீரியஸா இருக்கணுமா ? அந்த ஆஸ்பத்திரிக்கு போனாதாண்டி  சீரியஸ் ஆவாங்க .. டாக்டர், உங்க அண்ணன் வெங்கி தானே ?'

சுஜா : ' ஆமா .. நம்ம குடும்பத்துக்கே கை ராசியான டாக்டர் ஆச்சே '

பார்த்தா : ' ஆமா ..  வந்த வியாதி குணம் ஆகுதோ இல்லையோ , இவன் கை நீட்டி  பணம் வாங்குகிறதில ராசியான ஆள் டி .. உங்க குடும்பமே இப்படி தான் '

சுஜா : ' அப்ப , நாக்கு கூசாம  ஏன் இரண்டு லட்சம்  வரதட்சினை கேட்டீங்க ?'

பார்த்தா :  'நியாயபடி,  நான் பத்து லட்சம்  கேட்டு இருக்கணும். உங்கப்பன் L.I.C ஏஜன்ட்டா இருக்கிறது தப்பு இல்ல . அதுக்குன்னு நிச்சயதார்த்தம் ஆனாவுடனே ' நீங்க போனதுக்கப்புறம் என் பொண்ண  பாலிசி தான் காப்பாத்தும்ன்னு' சொல்லி  ஒரு அஞ்சு லட்சத்துக்கு பாலிசி வாங்க கேட்டாரே , அதுக்கு அவர் நாக்கு இல்லடி மூக்கே கூசும்  !!'

சுஜா :  ' அது அது .. என் மேல உள்ள பாசத்தில '

பார்த்தா : ' பாசமா ? மோசம்டி ! .. நம்ம கல்யாணத்துக்கு வந்தவங்க கிட்ட ' என் கிட்ட பாலிசி எடுத்தா  ஸ்பெஷல் மீல்ஸ் இல்லாட்டி இட்லி சட்னி மட்டும் சொன்னது கேவலம்டி  ' .. என்னோட பிரண்ட்ஸ் எல்லாம்  அவர் பாதர்- இன்-லாவா  இல்ல பாலிசி-இன் லாவா ன்னு கேட்க ஆரம்பிச்சிட்டாங்க '

சுஜா : 'கடமை , கண்ணியம் , கட்டுப்பாடு '

பார்த்தா : ' எருமை , பைத்தியம் , குட்டுபாடு ன்னு சொல்லாம் '

சுஜா :  ' ஏதாவது  உளறாதீங்க.. எங்க அண்ணனுக்கு என்ன குறைச்சல் ?'

பார்த்தா : ' உங்க அப்பனாவது பரவாயில்ல ..கல்யாணத்துக்கு வந்த எல்லோருக்கும் உங்க அண்ணன் 'சாப்பிட்டதுக்கு அப்புறம் என்னோட  கிளினிக்கு அட்மிட் ஆகிடுங்கன்னு'  தாம்பூலம் வெத்தலை பாக்கு வைக்கிறதுக்கு பதிலா உங்க அண்ணன் அவனோட விசிடிங்  கார்டும் , இலவசமா ஒரு ஜெளுசில் கொடுத்து இருக்கான் ..வந்தவங்க எல்லோரும் டாக்டர் செல்வ இரண்டு மடங்கா என் தலைல கட்டிடாங்க '

சுஜா : இரண்டு தடவையா ? என்னங்க , ஏமாந்து போயிடீங்களா?'

பார்த்தா : ஏமாந்து போனது நான் தான் . உங்க அண்ணன் கிட்ட போனதுக்கு ஒரு தடவ , அவன் மாத்திரையை சாப்பிடதுக்கு இன்னொரு டாக்டர் செலவு '

சுஜா : ' இது ஒரு பெரிய விஷயமா ?'

பார்த்தா : '  சரி .. கல்யாணத்தோட அவன் தொல்லை போகும்ன்னு பார்த்தா , எங்க குடும்பத்தில யாருக்கு வியாதி வந்தாலும் அவர் கிட்ட தான் போக சொல்ற '

சுஜா  : ' சரியா போச்சா இல்லையா , அது தான் முக்கியம்'

பார்த்தா : 'எங்க , அவங்க பாங்க் பாலன்ஸ் சரியா போச்சே வியாதி சரியா போகல '

சுஜா :  " சும்மா கத விடாதீங்க , உங்க சேது  மாமாக்கு தலைவலிக்கு போனாரே , அடுத்த நாளே சரியா போச்சா இல்லையா ?'

பார்த்தா  : ' தலைவலி  சுத்தமா போச்சு , அதோட    அவரோட பார்வையும் போச்சு '


சுஜா :' அது  அவர் விதி '

பார்த்தா : ' அந்த வீதி பக்கமே அவன் போயிருக்க கூடாது . அது கூட   பரவாயில்ல , உன் பிரசவத்துக்கு அங்க போயி அட்மிட் ஆனேயே , அது தாண்டி உச்ச கட்ட மோசமலர்கள் '

சுஜா  :  'அவனும் ஒரு டாக்டர் தானே '

பார்த்தா : ' அவன் E.N.T   டாக்டர்டி .. அவன் கிட்ட போயி , அந்த செலவையும் என்  தலைல  கட்டின .. கல்யாணம் பண்ணி பார், வீட்டை கட்டி பார் செரியா தான் சொன்னாங்க .. எனக்கு கல்யாணம், உங்க அப்பனும் உன் அண்ணனும் ஆளுக்கு ஒரு வீடு வாங்கினாங்க'

சுஜா :  'எங்க வீட்ட  குறை சொல்லாம உங்களுக்கு தூக்கம் வராதே '

பார்த்தா : ' உங்க குடுபத்தோட பெருமைய சொல்லனும்னா , 1330 குறள் பத்தாதுடி ...  திருந்தாத  குரல்ன்னு வேணா எழுதலாம் ! '

சுஜா : 'என்னவோ பண்ணி தொலைங்க , சீக்கிரம் டாக்டர் கிட்ட வாங்க '

பார்த்தா : ' ஒரு போலி டாக்டர் கிட்ட கூட போவேன் , ஆனா உன் அண்ணன் கிட்ட மட்டும் போக மாட்டேன் '

சுஜா : ' சரி , வாங்க போகலாம் .. ஆனா எங்க அண்ணன் சாபம் சும்மா விடாதுங்க '

பார்த்தா:  ' சாபமாம் , லாபம் சும்மா விடாதுன்னு சொல்லு. சரி வா , கிளம்பலாம் .. '

இப்படியா பார்த்தாவும் சுஜாவும் டாக்டர் கிட்ட போக கிளம்பினர்.


Wednesday, June 19, 2013

உங்க பல்ல பார்க்கணும் -2



1) 'மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்'
      'சாரி சார். எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது '

2) ' ஒரு தடவ முடிவு பண்ணிட்டேன்னா என் பேச்ச நானே கேட்க மாட்டேன் '
      ' டேய் .. மோதல அந்த செவுடு மெஷின போட்டு  தொலை டா '

3) ' எவ்வளவு நாளா ஒரு பொண்ண  தேடி கிட்டு இருக்க ?'
 ' நீ தான் பொண்ணு மஹா லக்ஷ்மி மாதிரி இருக்கணும்ன .. எந்த பொண்ணப் பார்த்தாலும் இரண்டு கை தான் இருக்கு .. யாருக்கும் நாலு கை இல்லையே '

4) 'நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி '
     'அத ஏன் சார் நூறு தடவ சொல்றீங்க '

5) ' எங்க கூட்டு சாப்பிடதுக்கு அப்புறம்  மூடி வைங்க , இல்லாட்டி கெட்டு போகிடும் '
        ' அது பரவாயில்லமா .. ..மூடி வெச்சு, மத்தவங்க  சாப்பிட்டா வயறு கேட்டு போயிடும்'

6) 'எங்க அப்பா மாதிரி நாலு பேரு இருந்தா இந்த ஊர்ல தானா மழை பெய்யும்.'
        'ஆமா  ஆமா .. பத்து வருஷத்துக்கு ஒரு முறை'

7) என் சார் டம்பளர நடு ஹால்ல நிறுத்தி வெச்சிருக்கீங்க ?
 ' என் போண்டாடித்தான் குடிக்கறத நிறுத்த சொன்னா !'

8) உங்க பையன்  ஏன் ஒரு கைல கத்தியும் இன்னொரு  கைல மருந்தும் வெச்சிருக்கான்?
'  டாக்டர் ஷார்ப்பா பத்து மணிக்கு  மருந்து சாப்பிட சொன்னாராம். '

9) ' அப்பா , அஞ்சு ரூபாய் மிச்சம் பண்ணினா அம்மா திட்றாங்கபா !'
'என்னடா மிச்சம் பண்ணின?'
'அம்மா ஒரு முட்டை வாங்கி வர சொன்னாங்க . நான் எதுக்கு செல்வுன்னு எக்ஸாமில வாங்கிட்டேன்'

10) 'என்ன சார் உங்க பையன் டெய்லி கோயில் வறான் ?'
' நீங்க ஒண்ணு, அவன் தினமும் கடவுள் கிட்ட அவங்க கணக்கு டீச்சர  கூட்டிடு போக வேண்டிக்கிறான் !!'





Friday, June 7, 2013

உங்க பல்ல பார்க்கணும் -1



1) 'நடந்தது நடந்து போச்சு ..'
'அப்ப, நடக்காதது ஆட்டோல போச்சா ?'

2) 'ஆத்துல போட்டாலும் அளந்து தான் போடனும் '
'சாரி மாமா .. இப்ப தான் நடு ஆத்துல போடடேன். போயி எடுத்துட்டு அளந்து திருப்பி போடறீங்களா?'

3) 'அஞ்சுல வளையாதது ஐம்பதில் வளையாது '
'ஒரு அஞ்சு ரூபா காயினும் ஐம்பது ரூபா நோட்டும் தாங்க , நான் வளச்சு காட்றேன்.'

4) 'கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்'
'நேத்தி நீ அருகம்புல் ஜூஸ் பண்ணும் போதே நினைச்சேன்.'

5) 'அகல உழுகிறதை விட ஆழ உழு'
'இத நாளைக்கு ஆப்ரேஷன் பண்ற டாக்டர் கிட்ட சொல்லு '

6) 'அடக்கமே பெண்ணுக்கு அழகு'
'அவங்க சொல்றது புருஷனோட அடக்கம்'

7)'அழுத பிள்ளை பால் குடிக்கும்.'
'அப்ப அழுத செட்டியார் மோர் குடிப்பாரோ'

8) 'குரங்கின் கைப் பூமாலை. '
'சாரி, fb ல உன் கல்யாண போட்டோவிற்கு போட வேண்டிய caption' !