Tuesday, June 25, 2013

டாக்டருக்கு B.P ஏறி போச்சு ! - Part 1



1990  - சுஜாவும் பார்த்தாவும் தம்பதியினர் . கல்யாணம் ஆகி இரண்டு ஆண்டுகள்  உருட்டி, கிருட்டி சமாளித்தனர்.  ஒரு சனிக்கிழமை, சாய்கால வேளை, பார்த்தா நாற்காலியில் உட்கார்ந்து இருந்தார் .சுஜா கிட்சன்லிருந்து ஹாலுக்கு வந்தார் .

சுஜா : 'வர வர நீங்க  ரொம்ப டயர்டா  ஆகறீங்க .. உங்க சுகர் செக் பண்ணனும். லோ லெவல் வந்தா இந்த மாதிரி இப்படி ஆகுமாம். '

பார்த்தா : 'தினமும்  ஒரு மூட்ட துணி கொடுத்து தொயிக்க சொன்னா , சுகர் வராம பின்ன சால்டா வரும் ?'

'இது  கூட பரவாயில்லடி ....நான் துவைக்கிற மேட்டர ஆபிஸ்ல ஏன் சொல்லி வெச்ச? ..இப்ப வெல்லாம் எவனாவது ஷர்ட்டில கறை வந்திசின்னா , சர்ப்பும் பார்த்தாவும் இருந்தா போதும்ன்னு கிண்டல் பண்றாங்க '

சுஜா : 'சும்மா வள வளன்னு பேசாதீங்க .. எனக்கு தெரிஞ்சு  ஒரு மருத்துவர் இருக்காரு '

பார்த்தா : 'என்னடி திடீர்ன்னு டாக்டர்ன்னு தமிழ்ல சொல்லாம மருத்துவர்ன்னு சொல்ற ? இப்பவெல்லாம் மருத்துவர்ன்னு சொன்னாலே அலறி அடிச்சு ஓடறாங்க நம்ம தமிழ் நாட்ல '

சுஜா : 'கொஞ்சம் சீரியஸா இருங்க .. சீக்கிரமா கிளம்புங்க .. அந்த டாக்டர் எட்டு மணிக்கு கிளம்பிடுவாரு'

பார்த்தா : 'சீரியஸா இருக்கணுமா ? அந்த ஆஸ்பத்திரிக்கு போனாதாண்டி  சீரியஸ் ஆவாங்க .. டாக்டர், உங்க அண்ணன் வெங்கி தானே ?'

சுஜா : ' ஆமா .. நம்ம குடும்பத்துக்கே கை ராசியான டாக்டர் ஆச்சே '

பார்த்தா : ' ஆமா ..  வந்த வியாதி குணம் ஆகுதோ இல்லையோ , இவன் கை நீட்டி  பணம் வாங்குகிறதில ராசியான ஆள் டி .. உங்க குடும்பமே இப்படி தான் '

சுஜா : ' அப்ப , நாக்கு கூசாம  ஏன் இரண்டு லட்சம்  வரதட்சினை கேட்டீங்க ?'

பார்த்தா :  'நியாயபடி,  நான் பத்து லட்சம்  கேட்டு இருக்கணும். உங்கப்பன் L.I.C ஏஜன்ட்டா இருக்கிறது தப்பு இல்ல . அதுக்குன்னு நிச்சயதார்த்தம் ஆனாவுடனே ' நீங்க போனதுக்கப்புறம் என் பொண்ண  பாலிசி தான் காப்பாத்தும்ன்னு' சொல்லி  ஒரு அஞ்சு லட்சத்துக்கு பாலிசி வாங்க கேட்டாரே , அதுக்கு அவர் நாக்கு இல்லடி மூக்கே கூசும்  !!'

சுஜா :  ' அது அது .. என் மேல உள்ள பாசத்தில '

பார்த்தா : ' பாசமா ? மோசம்டி ! .. நம்ம கல்யாணத்துக்கு வந்தவங்க கிட்ட ' என் கிட்ட பாலிசி எடுத்தா  ஸ்பெஷல் மீல்ஸ் இல்லாட்டி இட்லி சட்னி மட்டும் சொன்னது கேவலம்டி  ' .. என்னோட பிரண்ட்ஸ் எல்லாம்  அவர் பாதர்- இன்-லாவா  இல்ல பாலிசி-இன் லாவா ன்னு கேட்க ஆரம்பிச்சிட்டாங்க '

சுஜா : 'கடமை , கண்ணியம் , கட்டுப்பாடு '

பார்த்தா : ' எருமை , பைத்தியம் , குட்டுபாடு ன்னு சொல்லாம் '

சுஜா :  ' ஏதாவது  உளறாதீங்க.. எங்க அண்ணனுக்கு என்ன குறைச்சல் ?'

பார்த்தா : ' உங்க அப்பனாவது பரவாயில்ல ..கல்யாணத்துக்கு வந்த எல்லோருக்கும் உங்க அண்ணன் 'சாப்பிட்டதுக்கு அப்புறம் என்னோட  கிளினிக்கு அட்மிட் ஆகிடுங்கன்னு'  தாம்பூலம் வெத்தலை பாக்கு வைக்கிறதுக்கு பதிலா உங்க அண்ணன் அவனோட விசிடிங்  கார்டும் , இலவசமா ஒரு ஜெளுசில் கொடுத்து இருக்கான் ..வந்தவங்க எல்லோரும் டாக்டர் செல்வ இரண்டு மடங்கா என் தலைல கட்டிடாங்க '

சுஜா : இரண்டு தடவையா ? என்னங்க , ஏமாந்து போயிடீங்களா?'

பார்த்தா : ஏமாந்து போனது நான் தான் . உங்க அண்ணன் கிட்ட போனதுக்கு ஒரு தடவ , அவன் மாத்திரையை சாப்பிடதுக்கு இன்னொரு டாக்டர் செலவு '

சுஜா : ' இது ஒரு பெரிய விஷயமா ?'

பார்த்தா : '  சரி .. கல்யாணத்தோட அவன் தொல்லை போகும்ன்னு பார்த்தா , எங்க குடும்பத்தில யாருக்கு வியாதி வந்தாலும் அவர் கிட்ட தான் போக சொல்ற '

சுஜா  : ' சரியா போச்சா இல்லையா , அது தான் முக்கியம்'

பார்த்தா : 'எங்க , அவங்க பாங்க் பாலன்ஸ் சரியா போச்சே வியாதி சரியா போகல '

சுஜா :  " சும்மா கத விடாதீங்க , உங்க சேது  மாமாக்கு தலைவலிக்கு போனாரே , அடுத்த நாளே சரியா போச்சா இல்லையா ?'

பார்த்தா  : ' தலைவலி  சுத்தமா போச்சு , அதோட    அவரோட பார்வையும் போச்சு '


சுஜா :' அது  அவர் விதி '

பார்த்தா : ' அந்த வீதி பக்கமே அவன் போயிருக்க கூடாது . அது கூட   பரவாயில்ல , உன் பிரசவத்துக்கு அங்க போயி அட்மிட் ஆனேயே , அது தாண்டி உச்ச கட்ட மோசமலர்கள் '

சுஜா  :  'அவனும் ஒரு டாக்டர் தானே '

பார்த்தா : ' அவன் E.N.T   டாக்டர்டி .. அவன் கிட்ட போயி , அந்த செலவையும் என்  தலைல  கட்டின .. கல்யாணம் பண்ணி பார், வீட்டை கட்டி பார் செரியா தான் சொன்னாங்க .. எனக்கு கல்யாணம், உங்க அப்பனும் உன் அண்ணனும் ஆளுக்கு ஒரு வீடு வாங்கினாங்க'

சுஜா :  'எங்க வீட்ட  குறை சொல்லாம உங்களுக்கு தூக்கம் வராதே '

பார்த்தா : ' உங்க குடுபத்தோட பெருமைய சொல்லனும்னா , 1330 குறள் பத்தாதுடி ...  திருந்தாத  குரல்ன்னு வேணா எழுதலாம் ! '

சுஜா : 'என்னவோ பண்ணி தொலைங்க , சீக்கிரம் டாக்டர் கிட்ட வாங்க '

பார்த்தா : ' ஒரு போலி டாக்டர் கிட்ட கூட போவேன் , ஆனா உன் அண்ணன் கிட்ட மட்டும் போக மாட்டேன் '

சுஜா : ' சரி , வாங்க போகலாம் .. ஆனா எங்க அண்ணன் சாபம் சும்மா விடாதுங்க '

பார்த்தா:  ' சாபமாம் , லாபம் சும்மா விடாதுன்னு சொல்லு. சரி வா , கிளம்பலாம் .. '

இப்படியா பார்த்தாவும் சுஜாவும் டாக்டர் கிட்ட போக கிளம்பினர்.


No comments:

Post a Comment