Friday, July 12, 2013

டாக்டருக்கு B.P ஏறி போச்சு ! - Part 3



1990 .

எப்படியோஒரு வழியாக பார்த்தாவை டாக்டருக்கு போவதற்கு கன்வின்ஸ் செய்து , இருவரும்  தயாரானார்கள். தயாரான கூத்தை இந்த பக்கங்களில் படிக்கவும்  - முதல் , இரண்டு படிக்கவும்.

ஒரு வழியாக , டிபன் முடித்து விட்டு , இருவரும் ஹாஸ்பிடல் போக தயாரானார்கள். வீட்டின் அருகே ஆட்டோ வராததால் , பக்கது  மெயின் ரோட்டுக்கு சென்றனர். அங்கே ஒரு ஆட்டோ இருந்தது . 

 பார்த்தா : 'ஆஸ்பத்திரிக்கு  வரியா?'

யாரோ :  'எந்த ஆஸ்பத்திரிக்கு சார் ?'

பார்த்தா : 'அடையார், மாறன் பா ..'

யாரோ : 'அது கொஞ்சம் சுமாரா தானே இருக்கும். வேற எங்கயாவது பீச், சினிமான்னு போங்களேன். எனக்கும் கொஞ்சம் ஜாலியா இருக்கும்.'


பார்த்தா : 'அடேய் , உடம்பு சரியில்லன்னா ஹாச்பிடல் தான்டா போகணும். அதுக்கு சாய்ஸ் கிடையாது. சரி, எவ்வளவு கேட்கற ?'

யாரோ : 'என்ன சார் , ஆஸ்பத்திருக்கு போறீங்க .  இதுக்கு போய் காசு கேட்பாங்களா ?'

பார்த்தா : 'பிரசவத்துக்கு தான் இலவசம்ன்னு கேள்வி பட்டிருக்கேன். நீ என்னடான்னா ..( சுஜாவிடம் முணுமுணுத்தபடி ' சரியான ஏமாளி டி ') ..'

'வா பா போகலாம் . .'

இப்படி சொன்னவுடன்  சுஜாவும், பார்த்தாவும் பின்னாடி உட்காருகிறார்கள் . அவர்களுடன் சேர்ந்து அந்த ஆசாமியும் உட்காருகிறான்.

பார்த்தா : 'யோவ், என்னையா  எங்க கூட உட்கார்ற? ஆட்டோவ யார் ஒட்டுவா'

யாரோ : 'டிரைவர் தான் .'

பார்த்தா : ' அப்ப நீ டிரைவர் இல்லையா ?'

யாரோ : 'நானும் டிரைவர் தான் . '

பார்த்தா : 'அப்ப, ஓட்ட வேண்டியதானே ?'

யாரோ : 'என்னோட வண்டிய தானே நான் ஓட்ட முடியும் ?'

பார்த்தா : 'அப்ப, உன் ஆட்டோ இது இல்லையா ?'

யாரோ :  'அட போயா , என் கிட்ட ஆட்டோவே  இல்லையே !'

பார்த்தா : 'டிரைவர்ன்னு சொன்ன ?'

யாரோ : ' ஆமாம் . அங்க இருக்கு பாரு அந்த மூணு சக்கர வண்டி. அதோட டிரைவர் .'

பார்த்தா : 'அப்ப, ஆஸ்பத்திருக்கு வர்றியா கேட்டதுக்கு வரேன் சொன்ன ?'

யாரோ : 'ஆமாம் . எனக்கு வயறு சரியில்ல .. என்ன கூட்டிட்டு போறேன்னு நினைச்சேன்.'

பார்த்தா :  'அதுக்கு  ஏன்டா டிரைவர் சீட்ல தனியா  உட்கார்ந்து  இருந்த ?


யாரோ : 'யோவ் ..  அங்க நிக்கிற  பஸ்ஸ பாரு .. ஒரு பாட்டி மட்டும் தனியா உட்கார்ந்து இருக்கு .. அப்ப அந்த பாட்டி தான் டிரைவரா ?'

அந்த ஆசாமி கிளம்பியுடன் ,பார்த்தாவும் சுஜாவும் மறுபடியும் இன்னொரு ஆட்டோவை தேட ஆரம்பித்தனர்.

சுஜா :  'பேசாம பஸ்ல போய் இருக்கலாம் . கூட்டமா இருந்தாலும், டிரைவர் யார்ன்னு குழப்பம் இருக்காது

பார்த்தா : 'நீ பேசாம இருப்பேன்னா நடந்து கூட போக தயார்டி.. சரி சரி.. அங்க ஒரு ஆட்டோவும் டிரைவரும் இருக்காங்க .. ரெண்டும் சேர்ந்து வருவாங்களான்னு கேட்கலாம்.'

சுஜா : ' இது ஆட்டோவா ?'

அந்த ஆட்டோகாரன்  நிமிர்ந்து பார்க்கிறான் . இது ஒரு கேள்வியா என்பது போல ஒரு பார்க்காத பார்வை.

பார்த்தா : ' இது உன் ஆட்டோவா ?'

சுஜா : ' இருங்க , அதுக்கு  முன்னாடி ... நீ ஆட்டோ டிரைவர்   தானா ?'

ஆ.டிரைவர் : ' என்ன சார் . ரெண்டு பெரும் தனியாவா வந்து இருக்கீங்க ?'

பார்த்தா : ' ரெண்டு பேர் .. அப்புறம் என்ன தனியா ?'

ஆ.டிரைவர் : ' புரியுது சார் .. நீங்க ஹாஸ்பிடல் தானே போகணும் '

பார்த்தா : ' ஆமாம்பா ..'

ஆ.டிரைவர்  : ' கிழ்பாக்கம் தானே .. ரெண்டு பேர பார்த்தாலே தெரியுது '


பார்த்தா : ' அதுக்கு  இவளோட சொந்தக்காரங்க வருவாங்க .. இப்போதிக்கி அடையார் மாறன் ஹாஸ்பிடல் போகணும் ..எவ்வளவு ஆகும் ?'

ஆ.டிரைவர்  : 'அம்பது ரூபா சார்  '

பார்த்தா : ' மாறன் ஹாஸ்பிடல்க்கு அம்பது ரூபாயா ?"


ஆ.டிரைவர்  : ' மாறன் ஹாசஸ்பிடல்க்கு இல்ல சார் .. அங்க போறதுக்கு '

பார்த்தா : 'கொஞ்சம் கொறச்சுக்கபா ..நாப்பது ரூபா வாங்கிக்கோ..'

ஆ.டிரைவர்  : 'நாப்பது ரூபாக்கு போகணும்னா , பக்கத்துக்கு ஸ்டாப்ல இருந்து போகலாம் . நீங்க நடந்து போய் பக்கது ஸ்டாப்ல நில்லுங்க , நான் வரேன் ..'

சுஜா : '( பார்த்தாவிடம்) .. இங்க பாருங்க , டைம் ஆச்சு , பத்து ரூபா தானே ...
சரி பா , வா போகலாம் .'

பார்த்தா  : இருடி ..அவசரபடாத... ' என்னபா , மீட்டர் போடுவியா ?'

ஆ.டிரைவர்  :  ' சாரி சார் . அந்த பழக்கம் எனக்கு இல்ல '

பார்த்தா : 'என்னைய இது என்னமோ தண்ணி அடிக்கிற பழக்கம் மாதிரி சொல்ற ... லா படி நீ மீட்டர் போடணும் .. மீட்டர போடு '

இப்படியா அவர்கள் ஆட்டோவில் பயணம் செய்ய தொடங்கினர் .பேசி கொண்டு  ஒரு பதினைந்து நிமிடம் கழித்து  மீட்டரை பார்க்கும் பொழுது பார்த்தாவுக்கு அதிர்ச்சி .. குதிரை வேகத்தில் செல்கிறது !

பார்த்தா : 'என்னடா இது மீட்டரா இல்ல ஹீட்டரா ?  மொதல்ல உன்னோட மீட்டர  தான்டா ஹாஸ்பிடல்ல  சேர்க்கணும்.நல்ல வேளைடா இந்த மீட்டர கிளாக்கா யூஸ் பண்ணல, பண்ணி இருந்தா இத்த நேரம் எனக்கு ரீடைர்மென்ட் வந்து இருக்கும் .'

ஆ.டிரைவர்  :' காச பார்க்காத சார் . ராசிய பாரு .இந்த ஆட்டோல பத்தில , அஞ்சு பேருக்கு குணம் ஆகிடும் ..'

பார்த்தா : 'அப்பா , அந்த மீதி அஞ்சுபேர் ?'

ஆ.டிரைவர்  : ' அவங்க அந்த மீதி அஞ்சு பேர பார்க்க  வந்தவங்க !'

 பார்த்தா : ' சுத்த ராசி இல்லாத ஆட்டோவா இருக்கும் போல . உன் பேர் என்ன பா '

ஆ.டிரைவர்  : ' கரிகாலன் சார் '

பார்த்தா :  ' பேசாம ராகுகாலன்னு வெச்சு இருக்கலாம் . '

 ஆட்டோ மாறன் ஹாஸ்பிடல் தாண்டி பீசன்ட் நகர் சென்றது ..

பார்த்தா : 'யோவ் .. என்னைய மாறன் ஹாஸ்பிடல் தாண்டி எங்கயா வந்து இருக்க ..'

ஆ.டிரைவர்  : ' உங்க கூட பேசினதில நேரம் போனதே தெரியல ..  பாருங்க  பழக்க தோஷத்தில சுடுகாட்டுக்கு வந்திட்டேன் '


பார்த்தா : 'பழக்க  தோஷத்திலா ?

ஆ.டிரைவர்  :' நம்ம வீடு பக்கத்தில இருக்கு சார் .என்கிக்காவது போக தான் போறோம். போக போது தூக்கிட்டு போற  செலவு வைக்க வேண்டாம் பாருங்க, அதான் பக்கத்தில வீடு கட்டிட்டேன்  .. இந்த வெட்டியான் கூட நம்ம தோஸ்த் தான் . ஏதாவது வேணும்னா சொல்லுங்க , சீப்பா பண்ணிதறேன் '

பார்த்தா : ' உன் கிட்டா பேசினா உசிரே போய்டும் போல .. திரும்பி ஹாஸ்பிடல் போ '

ஆ.டிரைவர்  : 'நம்ம தான் ஹாச்பிடலே போகலயே .. அப்புறம் எப்படி திரும்பி போக சொல்ற '

பார்த்தா : '  நீ வண்டி ஓட்டற லட்சதனதுக்கு  வார்த்தைல விளையாடற ... ஆட்டோவ திருப்புயா'

இப்படியா ஒரு வழியா ஹாஸ்பிடல் வந்து சேர்ந்தனர்.

1 comment:

  1. you will be titled as : Vaarthai Sidhdhar" over a meeting in an auto .Pl.send Rs.100000/00 for the same. One small joke, I am getting...an auto driver went to a shop to purchase shirting cloth..shop fellow says .. per meter Res. 250..Auto says - no no!no Meter. Tell me the total price for this ...
    Shop fellow's BP meter broke!!!
    A.R.Natarajan

    ReplyDelete